திருக்குறள்

வலைப்பதிவு காப்பகம்

21 ஏப்., 2009

தி.மு.க., கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி : ராமதாஸ் சொல்கிறார்


சேலம் : ""கருணாநிதி அமைத்த கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி,'' என சேலத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.


சேலத்தில் நேற்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 1967ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி ஆரம்பித்தது. காங்.,குக்கு எதிராக தி.மு.., தலைமையில் அமைத்த கூட்டணி அது. முதல் கூட்டணியே கொள்கை அடிப்படையில் அமைந்தது அல்ல. இதை பின்பற்றி தான், அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கொள்கை முரண்பாடு கொண்ட கட்சிகளும் தொகுதி உடன்பாட்டின் அடிப்படையில் ஒரே கூட்டணியில் இடம் பெற்றன.இப்படி கொள்கையில் முரண்பாடு கொண்ட கட்சிகள் தொகுதி உடன்பாட்டின் கீழ் ஓர் அணியில் இணைந்து போட்டியிடுவது தவறில்லை என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பலமுறை கூறி வந்துள்ளார். அண்ணாதுரையின் கருத்தைக் கூட கருணாநிதி மறந்து விட்டு, ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளதையும் மறந்து விட்டு, இன்று தேர்தல் பயம் காரணமாக .தி.மு.., கூட்டணி முரண்பாடான கூட்டணி என முத்திரை குத்தப் பார்க்கிறார்.
சேது சமுத்திர திட்டத்தில் அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு வேறு, பா.ம.க., - ம.தி.மு.க.,வின் நிலைப்பாடு வேறு. விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் குறித்து அ.தி.மு.க., நிலைப்பாடு வேறு, பா.ம.க., - ம.தி.மு.க., நிலைப்பாடு வேறு. அதனால், அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். நாள்தோறும் தூங்காமல் எழுதுகிறார், பேசுகிறார்.தன்னைப் பற்றி மட்டும் மறந்து விடுகிறார். தன் கண்ணில் பெரிய உத்திரம் இருப்பதை மறந்து விட்டு, மற்றவர் கண்ணில் துரும்பு இருப்பதாகக் கூறி வருகிறார். கொள்கை மாறுபட்ட கட்சியுடன் தி.மு.க., அணி சேர்ந்தால் அதற்கு ஒரு விளக்கம் சொல்கிறார். ஆனால், அதே ரீதியில் மற்றவர்கள் சேர்ந்தால் குறை கூறுகிறார். இது தான் கருணாநிதியின் பாணி.


தி.மு.க.,வும், காங்.,கும் ஒரே அணியில் இருப்பது 100க்கு 100 உடன்பாடு இல்லை. தி.மு.க.,வின் லட்சியத்தையும், கொள்கையையும் காங்கிரஸ் அப்படியே ஏற்றுக் கொள்கிறதா? காங்கிரசின் கொள்கை, லட்சியத்தை தி.மு.க., ஏற்றுக் கொள்கிறதா? தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியகருத்துக்கு இன்று (நேற்று) மறுப்பு தெரிவித்துள்ளார் கருணாநிதி. எனவே, முரண்பாடான, சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்ல வேண்டுமானால் தி.மு.., கூட்டணியைத் தான் சொல்ல வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை: