திருக்குறள்

வலைப்பதிவு காப்பகம்

18 ஏப்., 2009

பணத்தால் தி.மு.க.,வெற்றி பெற முடியாது':மருத்துவர் அய்யா



சென்னை:""பணத்தை கன்டெய்னரில் கொண்டு வந்து இறக்கினாலும், விமானத்தில் பறந்து கொண்டே 1,000 ரூபாய் நோட்டுக்களை வாரி வீசினாலும், தி.மு.க., கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது,'' என்று பா.ம.க., நிறுவனர் மருத்துவர் அய்யா பேசினார்.ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க., வேட்பாளர் செயல்வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த பல்லாவரத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மருத்துவர் அய்யா பேசியதாவது:அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி ஒரு இயற்கையான கூட்டணி. நாளுக்குநாள் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. மக்கள் சக்தி ஜெயலலிதா பின் உள்ளது. உழைப்பிற்குப் பெயர் பெற்ற கம்யூனிஸ்டுகள் நம்முடன் இருக்கின்றனர். இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் தோற்கப் போகிறது. "பணம் தான் தேர்தல் என்றால், டாடா, பிர்லா, அம்பானி போன்றோர் தான் பிரதமராக வர முடியும்' என்று ஜெயலலிதா கூறினார்.

டாட்டா ஒரு தொகுதிக்கு 50 கோடி வீதம் 543 தொகுதிகளுக்கும் செலவு செய்தால், அவர் வெற்றி பெற்றுவிடுவாரா; மக்கள் அவரைப் பிரதமராக ஆக்குவாரா? இது முடியாத காரியம்.நமது கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கைகள், நோக்கங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லியும், தி.மு.க., அரசின் அவலங்களை எடுத்துச் கூறியும் ஓட்டு கேட்க வேண்டும்.பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், மக்கள் என்னைத் தேடி வர வேண்டாம்; நான் மக்களைத் தேடி வருவேன். எறும்பை விட சுறுசுறுப்பாக உழைத்து, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்.இவ்வாறு மருத்துவர் அய்யா ராமதாசு பேசினார்.

கருத்துகள் இல்லை: