திருக்குறள்

30 அக்., 2010

தமிழீழத்தின் மீதான ஒரு தலிபான் / அல்காய்தா / பாகிஸ்தானியின் பார்வை

தமிழீழத்தின் மீதான ஒரு இசுலாமிய அடிப்படைவாதியின்(தலிபான் அல்லது அல்காய்தா அல்லது  பாகிஸ்தானியின்) பார்வை 


1 .புலிகள் இந்தியாவின் கைக்கூலிகள் .

2 .தமிழீழம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு வேலை .

3 .இந்துக்கள் இஸ்லாம்
அல்லது புத்த மதத்தினரையும் அழிக்கநினைக்கும் அரசியல் போர்.
4 . இந்தியா புலிகளுக்கும்
மற்றும்  சிங்கள அரசுக்கும் ஆயுத உதவி அளித்து இலங்கை மக்களை ஒடுக்க (நினை)கிறது.
 
ஏற்புரை:இந்த முடிவுகள் இயங்கி கொண்டிருக்கும் ஒரு இசுலாமிய அடிப்படைவாதியின் அல்லது மதிய கிழக்கு நாடுகளின் பரப்புரையின்(அரசியல் நோக்கர்களின் ) முடிவுகள் மட்டுமே .இந்த  பதிவரின் தனிப்பட்ட  கருத்துகள் அல்லது முடிவுகள் அல்ல .
விழைவு :-ஒவ்வொரு மத்தியகிழக்கு வாழ் தமிழரும் இத்தகைய தவறான 
பார்வைகளை களைய  வேண்டியது அவர்களது கடமை என விழைவது யான் 
நன்றி  
சோழன் 

22 பிப்., 2010

நிகழரசியல் விடுகதை ??? 02.2010பதிவுலக பட்டறிவாளர்களே!! உங்களுக்கு ஒரு அரசியல் விடுகதை

பதிலிடுங்கள் பின்னுட்டத்தில் ,எங்கள் தலமைக்குழாம் சார்பில் உங்கள் பதிவுகளை பொன்னேட்டில் பதிக்க ஆவண செய்கிறேன்

களம் :தமிழரசியல் பிப்ரவரி 2010 வரை

கேள்வி :ஒன்று
கருவறுக்க காத்திருக்கும் பேய்காமன் யார் ?

௧.திருலங்கா
௨.நோண்டிய
௩.ச்சீனா
௪.ஒமேரிக்கா

கேள்வி :இரண்டு
அங்கே கடைசி கோவணத்துன்னடையும் ஆட்டையைப்போட துடிக்கும் நாட்டமை யாரார் ?

௧.திருலங்கா
௨.நொண்டியா
௩.டச்சீனா
௪.ஓமெரிக்கா

கேள்வி :மூன்று
வேலியில் போவதையெல்லாம் மடியில் விட்டுக்கொண்டு (வாரிசுகளுக்காக),தல கொதிக்க குருமாவை (விட்டு) கேட்பவன் யாரார் ?

௧.சாணக்கிய சொட்டையன்

௨.துணைபதி
௩.மொழகிரி
௪.கோமா.நாராயணன்

கேள்வி :நான்கு
வாங்கியதற்கு அதிகமாக கொதிக்கும் குருமா யார் ?
(சொட்டையன் சூத்திலே அடிச்சாலும் என்னை நல்லவேன்னு சொன்னான்டா ,ஊஉ ,,,,,, )
௧.தேறுமா

௨.டக்குவார் டங்கம்
௩.தன்னியரசு
௪.தல

ஒன்றுக்கு மேற்ப்பட்ட பதில்கள் பொருந்தி வருமாகில் அல்லது சீருக்கு பொருள் தெரியாவிட்டால்
நீங்கள் அரசு போட்டித்தேர்வு எழுத தகுதியற்றவர்
முற்றுணர்ந்த அறிஞர்களே நீங்கள் பின்னுட்டத்தில் பின்னி பெடலெடுக்கலாம் .

டிஸ்கி :உங்கள் பதிவுகளை பொன்னேட்டில் பதிக்க ஆவண செய்கிறேன் !!
இந்தப்போட்டியில் வரும் சொல்லாடல் அனைத்தும் எமது கற்பனையே
யாரையும் துன்புறுத்த அல்ல !!!!!!!!!

24 அக்., 2009

உலக தமிழ் செம்மொழி மாநாடு அழைப்பை பா.ம.க. ஏற்கிறது: ராமதாஸ்

Press Release
உலக தமிழ் செம்மொழி மாநாடு அழைப்பை பா.ம.க. ஏற்கிறது: ராமதாஸ்

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பை பா.ம.க. ஏற்றுக்கொள்கிறது என்று முதல்வர் கருணாநிதிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

2010 ம் ஆண்டு ஜுன் மாதம் 24 ந் தேதி முதல் 27 ந் தேதி வரையில் கோவை மாநகரில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்றும், மாநாட்டிற்கென அமைக்கப்பட உள்ள குழுக்களில் பா.ம.க. சார்பாக பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளீர்கள்.

கட்சி வேறுபாடு இன்றி, தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் அதன் ஆக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இந்த மாநாடு நடைபெறும் என்று உறுதியளித்து ஒத்துழைப்பை கோரியிருக்கிறீர்கள். உங்களது இந்த உறுதிமொழிக்கும், ஒத்துழைப்பு கேட்டு அழைப்பு விடுத்ததற்கும் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1966 ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. கோவையில் நடைபெறுகிற மாநாடு இந்த வரிசையில் இடம்பெறுமா? அல்லது உலக தமிழ் செம்மொழி மாநாடு என்பதால் தனித்து நிற்குமா? என்ற சர்ச்சையில் நுழைய விரும்பவில்லை.

எனினும், உலக உருண்டையில் ஒரு பகுதியில் உள்ள தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியிருக்கும் நிலையில், தாய் தமிழகத்தில் கோலாகலமாக மாநாடு நடத்தப்படுவது தேவையா? கொஞ்சக்காலம் பொறுத்திருந்து இன்னும் சிறப்பாக நடத்தலாமே என்று எழுப்பப்படுகின்ற வாதத்தை எளிதில் தள்ளிவிட முடியாது என்பதை நினைவூட்டாமல் இருக்க முடியவில்லை.

எனினும் தமிழ், தமிழ் வளர்ச்சி தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பதால் ஆறுதல் கொள்ளலாம். தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இதுபோன்ற தமிழ் வளர்ச்சிக்கான மாநாடுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அதே நேரத்தில், இத்தகைய மாநாடுகளினால் ஏற்படும் விளைவுகள் என்ன? மாநாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டங்கள் என்ன? இதுவரையில் நடைபெற்றிருக்கும் மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அவற்றிற்கான செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறோமா? என்பவை குறித்து சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழ் ஆட்சிமொழி சட்டம் நிறைவேற்றப்பட்டு 53 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்னை தமிழுக்கு அரியணையை அளிக்கும் பணியில் முழுமை அடைந்திருக்கிறோமா என்றால், இல்லை' என்று நீங்களும் ஒப்புக்கொள்ளுவீர்கள். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொள்வார்கள்.

தமிழ் வளர்ச்சிக்கான மாநாடுகள் எந்தப் பெயரில் நடந்தாலும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்பது முழுமை பெறுவதும், தமிழ் பயிற்று மொழி என்பது நடைமுறைப்படுத்துவதும் தமிழ் மொழி வளர்ச்சியில் அழியாத அத்தியாயங்களாக இருக்கும் என்பதில் உங்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

வரும் கல்வியாண்டில் இருந்து சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாய் மொழியான தமிழ் மட்டுமே அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இருந்தால் மட்டுமே சமச்சீர் கல்வி நிறைவடையும் என்பது, சமச்சீர் கல்வி குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திருக்கும் அறிஞர் குழுவினரின் ஒருமித்த கருத்தாகும். இந்த லட்சியத்தை படிப்படியாக எட்டலாம் என்பதை விட்டுவிட்டு, இனி தமிழகத்தில் எல்லா மட்டத்திலும் தமிழே பயிற்சி மொழியாக இருக்கும் என்று சட்டம் இயற்றி அறிவித்து நடைமுறைப்படுத்துங்கள்.

இந்த அவலநிலைகளை எல்லாம் உடனடியாக மாற்ற தமிழ் அறிஞர்களை கொண்ட குழுவினை அமைத்து ஒருசில வாரங்களில் கலந்தாய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவகாசம் இருக்கிறது. தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன. இந்த அவகாசத்தை பயன்படுத்தி தேவையான சட்டங்களையும், அரசாணைகளையும் வெளியிட்டு அனைத்து நிலையிலும் தமிழ்; அதுவும் கலப்படம் இல்லாத தமிழ் என்ற நிலையினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இம்முயற்சிக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்புத் தருகிறோம்.

இத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், கோவையில் நடைபெற இருக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற உங்களது அழைப்பை பா.ம.க. ஏற்றுக்கொள்கிறது. மாநாட்டையொட்டி அமைக்கப்படும் குழுக்களின் விவரங்களை தெரிந்து அதில், பா.ம.க. சார்பில் இடம்பெறும் பிரதிநிதியை உரிய நேரத்தில் அறிவிக்கிறோம். கோவையில் நடைபெறும் மாநாடு தமிழ் மொழியின் ஆக்கம், வளர்ச்சி தவிர அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்று நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற உங்களது அழைப்புக்கு மீண்டும் நன்றி கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

13 அக்., 2009

ராஜபக்சேவை பழிவாங்காமல் விடமாட்டார்கள்: ராமதாஸ்


வன்னி வதை முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூரில் ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ’’இலங்கை அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் நாங்கள் இறக்கப்போகிறோம் எங்களை விடுவியுங்கள் என்று அவர்களை பார்க்க சென்றவர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

இலங்கைக்கு பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் போயிருந்தால் அந்த குரல்களை பதிவு செய்து சொல்வார்கள்.

முன்பைவிட இப்போது ஈழத் தமிழர்கள் வெகுண்டு எழுந்துள்ளார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சவை பழிவாங்காமல் விடமாட்டோம் என்ற நிலையில் உள்ளனர். என்ன பழி என்றால் தமிழ் ஈழம் மலர்வது தான். இதை நோக்கி தாய் தமிழர்களுடைய பயணம் இருக்க வேண்டும்.

நிச்சயமாக தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் இல்லையா என்று கேட்கிறார்கள். அந்தவகையில்தான் தொடர் முழக்க போராட்டம் செய்தோம்.

இதேபோல் தொடர்ந்து நம்முடைய பயணம் இருக்கும். இதை பற்றி இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவோம்’’ என்றார் ராமதாஸ்.

17 ஜூன், 2009

கலைங்கனேன்ரோ! தலைவனேன்ரோ!

இனி கலைஞர் என்றோ !!! , தலைவரேன்ரோ!!!
மனதில் வரிக்க போவதும்மில்லை ,நாவல் நவில போவதும்மில்லை
இந்த நக்கிபிழைக்கும் ஒட்டுண்ணி கூட்டத்தை (கழக குடும்பம் ).

எமது காலம் வெல்லும் வரை நடிக்கலாம் இந்தியானாக
இந்திய தாய்நாட்டில் உண்மையில்லை ,பிடிப்பு இல்லை
ஏனெனில் இந்த நரிகள் நடிகர்த்திலகமாக இருந்தாலும் .


போராடலாம் . அவர்கள் தான் மனிதர்களே இல்லையே .

விசக்கிருமியிடம் விடுதலை கேட்ட வெகுளிதமிழர்கலே!

வாடகைக்கு இந்தியனாக வாழாதே !!!

இது ஒரு இளைஞனின் உள்ளத்து குமுறல்

அம்மனிதனின் வாழ்க்கை குறிப்பில் ,,,,,,,,,,,,,

12 மே, 2009

கலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்!
1. கலைஞர் அய்யா ஸ்டாலினை மதுரை ஒருவர் கொல்லப் பாய்ந்தார், அதுனால ஸ்டாலின் அவர்களோட பாதுகாப்பு பூனைப்படை, ஆனைப்படையெல்லாம் போட்டீங்க சரி... அப்புறம் அந்த ஒருவரு என்ன ஆனாருங்க!. அவரைக் கண்டு பிடிக்கப் போட்ட போலீஸ் அதிகாரி என்ன ஆனாருங்க?.

2. அதே மதுரையில தினகரன் பத்திரிக்கைய யாரோ அடிச்சி நொறுக்கி தீ வெச்சாங்களே!. அதுலகூட ஒரு மூணு பேரு செத்தாங்களே. அதுக்கப்புறம்... அந்த பத்திரிக்கை ஆபீஸெ ஏன் நொறுக்குனாங்க, ஏன் அந்த மூணு பேரக் கொன்னாங்க அப்படின்னு நம்ம போலீசுகாரங்க கண்டு பிடிக்க ரொம்ப திணறுராங்கன்னு அனுதாபப் பட்டு சிபிஐ இதை விசாரிக்கட்டும்னு சொல்லி சிபிஐ கிட்ட ஒப்படைச்சீங்களே சிபிஐ காரங்க எதாவது கண்டுபிடிச்சி உங்கக்கிட்ட சொன்னாங்களா?

3. ஒகேனக்கல் பிரச்சனையில் முதுகெலும்பை முறிச்சாலும் விடமாட்டோமன்னு சொல்லி சில நடிகர்களோட முதுகையும், சில டைரக்டருங்க முதுகையும் கர்நாடகாப் பக்கம் போக விடாம நீங்க முறிச்சீங்களே!. அதுக்கப்புறம் கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சதும் ஒகேனக்கல் திட்டத்தை முடிப்போமுன்னு சொன்னீங்களே கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகப்போகுதே, இன்னும் எலக்‌ஷன் முடிஞ்ச தகவல் இன்னும் உங்களுக்குக் கிடைக்கலையா?

4. ஜனாதிபதி எலக்‌ஷனப்போ திருமதி.பிரதீபா பாட்டிலை நிறுத்த முடிவு செஞ்சப்போ, தமிழனான திரு.அப்துல் கலாமுக்கு ஆதரவு தராம இருக்க, பிரதீப் பாட்டீல் இன்ன இன்ன செய்வார் அப்படின்னு பட்டியல் போட்டீங்க. அதுல பிரதீப் பாட்டீல் ஜனதிபதியா ஆனா “மகளீர் இட ஒதுக்கீடு” மசோதாவிலதான் முதல் கையெழுத்து போடுவாருன்னு சொன்னீங்க. பிரதீப் பாட்டீல் இன்னும் முதல் கையெழுத்து போடலையா?. அதில எதாவது தகவல் உங்களுக்குத் தெரியுமா?

5. உங்க அமைச்சரவையில அமைச்சரா இருந்தாரே தா.கிருட்டிணன். அவரு கொலையில உங்க மகன் உட்பட பல பேர் குற்றவாளிகளா இருந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியலைங்க. அதில யாருக்கும் சம்பந்தமில்லையன்னு எல்லோரும் விடுதலையாயிட்டாங்க. அப்போ தா.கிருட்டிணன் நடு ரோட்டில அரிவாளாலாலே தன்னைத் தானே வெட்டிக் கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாராங்க?

5. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிஞ்சு போன விஷயம் அப்படின்னு நீங்க சொன்னவுடனே பத்திரிக்கைகாரங்களும் நம்பிக்கிட்டு இப்போ அதைப் பத்தியெல்லாம் பேசறதே இல்லை. நிஜமாவே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை முடிஞ்சு போச்சா?. இவ்வளவு வேகமா பிரச்சனையை தீர்க்கிற நீங்க இலங்கைப் பிரச்சனையும் முடிஞ்சி போச்சு அப்படின்னு சொல்லிட்டா பத்திரிக்கைகாரங்க நம்ப மாட்டாங்களா?. ஏங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க?

6. அழகிரியும் முரசொலி மாறனுடைய மகன்களும் அடிச்சிக் கிட்டு இருந்தப்போ குடும்ப விஷயத்தைப் பக்கம்பக்கமா பத்திரிக்கையில கவிதையாவும், கட்டுரையாவும் அழுதுகிட்டும் மாறன் கும்பலை திட்டிகிட்டும் எழுதினீங்க, இப்போ அவங்க ரெண்டு பேரும் எந்த விஷயத்தால ஒண்ணு சேந்தாங்கன்னு ஏங்க எழுத மாட்டேங்கிறீங்க?

7. பூங்கோதை அப்படின்னு ஒரு அமைச்சர், வழக்கம் போல அவர் அமைச்சரின் அன்றாட பணியைச் செய்ததால நீக்கினீங்க. அவருடைய செயல் உங்களை மிகவும் அவமானப் படுத்துவதாகவும் சொன்னீங்க. திரும்பவும் உங்க அமைச்சரவையில சேர்த்துக் கிட்டு இருக்கீங்க்களே!. அவர் செஞ்ச செயலால உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் போயிடுச்சாங்களா?. அந்த அவமானத்தை கழுவ அவர் உபயோகிச்ச “சோப் ”என்னாங்க?

8. தமிழைச் செம்மொழியாக்குவோம் அப்படின்னு அடிக்கடி ஜனங்களை உசுப்பேத்துவீங்களே, இப்போ தமிழ் செம்மொழியாகி ரெண்டு, மூணு வருசமாயிடுச்சீங்களே. அதனால தமிழுக்கு என்ன நன்மை கிடைச்சதுன்னு இன்னிய வரைக்கும் யாருக்கும் தெரியலைங்க?. உங்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்களா?

9. முல்லைப் பெரியாறு, பாலாறுன்னு அடிக்கடி பேசுவீங்களே, இப்போ வாயையே நீங்க திறக்கரதில்லையே? ஏங்க!... பாலாற்றில ஆந்திர காங்கிரஸ் அரசு எல்லாத் தடுப்பணையையும் கட்டி முடிச்சப்புறம் தான் பேசுவீங்களா?

10. கடைசியா .. நீங்க சில விஷயத்துக்கு உயிரை கொடுக்கிறேன்னு சொல்லும் போது எனக்கே சிரிப்பாயிடுதுங்க. நீங்க உங்களோட அறிக்கையை எழுதும் போது நீங்க மட்டும் சிரிப்பீங்களா? அல்லது அதை நம்புற தமிழர்களை நினைச்சி உங்க வீடே சிரிப்பாச் சிரிக்குமா?

21 ஏப்., 2009

ஈழம் நேற்றும் இன்றும் எனும் மக்கள் தொலைகாட்சி தொடரில் தலைப்பு(title song) பாடல் –எழுதியவர் திரு.பச்சியப்பன்


என் இனிய சொந்தங்களே ,வாழ்வது ஒருமுறை ,பாமக பாமரன் இத்துடன்தனது இயக்க பணிகளை மீளாத்துயரோடு நிறுத்திவிடுகிறேன் (பாமக களம் காணாமல் ,ஈழம் நோவதைக்கண்டு )

ஈழம் நேற்றும் இன்றும் எனும் மக்கள் தொலைகாட்சி தொடரில் தலைப்பு(title song) பாடல் –எழுதியவர் திரு.பச்சியப்பன்

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

வெடி விழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காய்ந்த குளம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி படிந்த சிறு முற்றம்

இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை
தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய………………சம்மதமோ…………..

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

விளக்கேற்றிய மாடமெல்லாம்
வீழ்ந்து போனதோ…………..

ஊஞ்சலாடிய கம்பு இல்லை
நீந்தி பழகிய ஆறு இல்லை

என் தோப்பினுள் அலைந்த
பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற
தாய்பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட
விடியல் வருமோ
அர்த்த சாமத்தில்
வாழ்வு முடியுமோ


நன்றி திரு .மது

http://gkmadhu.blogspot.com/2009/02/title-song.html

குழலி பக்கங்கள்: நக்கிப்பிழைப்பவை நாய்கள்தான் போராளிகள் அல்ல!

குழலி பக்கங்கள்: நக்கிப்பிழைப்பவை நாய்கள்தான் போராளிகள் அல்ல!

தி.மு.க., கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி : ராமதாஸ் சொல்கிறார்


சேலம் : ""கருணாநிதி அமைத்த கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி,'' என சேலத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.


சேலத்தில் நேற்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 1967ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி ஆரம்பித்தது. காங்.,குக்கு எதிராக தி.மு.., தலைமையில் அமைத்த கூட்டணி அது. முதல் கூட்டணியே கொள்கை அடிப்படையில் அமைந்தது அல்ல. இதை பின்பற்றி தான், அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கொள்கை முரண்பாடு கொண்ட கட்சிகளும் தொகுதி உடன்பாட்டின் அடிப்படையில் ஒரே கூட்டணியில் இடம் பெற்றன.இப்படி கொள்கையில் முரண்பாடு கொண்ட கட்சிகள் தொகுதி உடன்பாட்டின் கீழ் ஓர் அணியில் இணைந்து போட்டியிடுவது தவறில்லை என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பலமுறை கூறி வந்துள்ளார். அண்ணாதுரையின் கருத்தைக் கூட கருணாநிதி மறந்து விட்டு, ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளதையும் மறந்து விட்டு, இன்று தேர்தல் பயம் காரணமாக .தி.மு.., கூட்டணி முரண்பாடான கூட்டணி என முத்திரை குத்தப் பார்க்கிறார்.
சேது சமுத்திர திட்டத்தில் அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு வேறு, பா.ம.க., - ம.தி.மு.க.,வின் நிலைப்பாடு வேறு. விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் குறித்து அ.தி.மு.க., நிலைப்பாடு வேறு, பா.ம.க., - ம.தி.மு.க., நிலைப்பாடு வேறு. அதனால், அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். நாள்தோறும் தூங்காமல் எழுதுகிறார், பேசுகிறார்.தன்னைப் பற்றி மட்டும் மறந்து விடுகிறார். தன் கண்ணில் பெரிய உத்திரம் இருப்பதை மறந்து விட்டு, மற்றவர் கண்ணில் துரும்பு இருப்பதாகக் கூறி வருகிறார். கொள்கை மாறுபட்ட கட்சியுடன் தி.மு.க., அணி சேர்ந்தால் அதற்கு ஒரு விளக்கம் சொல்கிறார். ஆனால், அதே ரீதியில் மற்றவர்கள் சேர்ந்தால் குறை கூறுகிறார். இது தான் கருணாநிதியின் பாணி.


தி.மு.க.,வும், காங்.,கும் ஒரே அணியில் இருப்பது 100க்கு 100 உடன்பாடு இல்லை. தி.மு.க.,வின் லட்சியத்தையும், கொள்கையையும் காங்கிரஸ் அப்படியே ஏற்றுக் கொள்கிறதா? காங்கிரசின் கொள்கை, லட்சியத்தை தி.மு.க., ஏற்றுக் கொள்கிறதா? தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியகருத்துக்கு இன்று (நேற்று) மறுப்பு தெரிவித்துள்ளார் கருணாநிதி. எனவே, முரண்பாடான, சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்ல வேண்டுமானால் தி.மு.., கூட்டணியைத் தான் சொல்ல வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

20 ஏப்., 2009

பாமக இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி..

ஏப்ரல் 05,2009,09:33 IST


' பாமக இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி...''- இதுதான் டாக்டர் ராமதாஸின் தேர்தல் கால கோஷம்

ஆனால், இந்தத் தேர்தலில்... மதிமுகவும், மார்க்சிஸ்ட்டும் தொகுதிப் பங்கீட்டில் அதிமுகவுடன் ''டூ'' விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், டாக்டரின் வாக்கு பலிக்குமா? தைலாபுரத்தில் இருந்த அவரிடமே சில கேள்விகளை முன் வைத்தோம்..

' அதிமுக கூட்டணியில் மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்று செய்திகள் வருகிறதே ?''

'' கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும், மார்க்சிஸ்ட்டுக்கும் ஒரேயொரு தொகுதிப் பங்கீடு,பெரும் சிக்கலில் இருந்தது. அந்த ஒரு தொகுதியால் அந்த இரண்டு இயக்கங்களின் கூட்டணியே முறிந்து விட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால், அந்த இயக்கங்களின் மேலிடத் தலைவர்கள் <உட்கார்ந்து பேசிச் சரி செய்தார்கள். அதுபோலவே எங்கள் கூட்டணியில் இருக்கும் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலை, எங்கள் கூட்டணித் தலைவர் சரி செய்வார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், நாற்பதும் எங்கள் கையில்தான் !''

' அதிமுக கூட்டணிக்குள் புதிதாகப் போன வேகத்திலேயே தேவையான தொகுதிகளைப் பெற்று, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டீர்கள் ! உங்கள் வருகைதான் மதிமுவை அந்தரத்தில் விட்டுவிட்டதாகப் பேசப்படுகிறதே ?''

'' தேர்தல் காலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு ஒரே சுற்றுப் பேச்சு வார்த்தையில் முடிந்து விடாது. தொடர்ந்து பேசித்தான் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். நாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தந்து விட்டது என்று சொல்ல முடியாது. சிலவற்றை விட்டுக்கொடுத்துதான் தொகுதிகளைப் பெற்றிருக்கிறோம். எங்கள் கட்சியை அதிமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுடன் மோதவிட, உளவுத்துறை தனது திருப்பணியை ஆரம்பித்திருக்கிறது. அதை எங்கள் கட்சித் தோழர்கள் நம்ப மாட்டார்கள். பாமகவுக்கும், அதிமுகவுக்கும் ஏற்பட்டிருப்பது இயற்கையான கூட்டணி !

நாங்கள் கூட்டணிக்குள் வருவதற்கு முன்பே மதிமுகவுடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். அந்தத்தோழமைதான் எங்களை ஓரணியில் சேர்த்தது. வைகோ மனம் புண்படும்படியாக எதுவும் நடக்காது. எங்கள் கூட்டணிக்குள் பெரும் புயல் வீசுவதாக எண்ணி, கலைஞர் இரண்டு மூன்று நாட்களுக்கு அற்ப சந்தோஷம் அடைந்துகொள்ளலாம். பாவம், இந்தத்தேர்தலில் அவர் அணிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது. குறைந்த பட்சம் இந்த அற்ப சந்தோஷமாவது மிஞ்சட்டுமே !''

'' தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் நீங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு மீண்டும் போகப் போவதாகவும், அதனால் காங்கிரஸை விமர்சிக்கும் பேச்சுக்கள் உங்கள் கூட்டணி மேடைகளில் இருக்காது என்றும் வரும் செய்திகள் பற்றி ?''

'' இந்தத் தேர்தலில் ஈழப் பிரச்னை, பிரதான பங்கு வகிக்கும். குறிப்பாக, ஈழத் தமிழர்களுக்காகக் கலைஞர் செய்த துரோகம் எங்கள் மேடைகளில் ஓங்கி ஒலிக்கும். ஈழப்பிரச்னை பற்றி எங்கள் கட்சித் தலைவர்கள் பேசிய கூட்டங்களில், கட்சி பேதமின்றி இளைஞர்கள் பெரும் திரளாகத் திரண்டார்கள் !

தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க நானும் வைகோவும் சென்றபோது பாமக., மதிமுக தொண்டர்கள் எங்களை வரவேற்று பிரம்மாண்டமான நுழைவு வாயில்களை வைத்திருந்தார்கள். திமுகவைப் பற்றி பேசுவதற்கே எங்கள் மேடைகளில் நேரம் போதாது. 77-ம் வருடம் நாடெங்கும் நெருக்கடி நிலை பிரதானமான பிரச்சாரமாக அமைந்தது. தேர்தல்முடிந்து, நாற்பது எம்.பி.க்களை கையில் வைத்திருக்கப்போகும் எங்கள் கூட்டணி ஆதரிக்கும் கட்சியில்தான் மத்தியில் ஆட்சியமைக்க முடியும் ! அந்த வகையில், எங்கள் கூட்டணியின் தலைவர் என்ன சொல்கிறாரோ, அதன்படிதான் நாங்கள் செயல்படுவோம்.''

'' எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறீர்கள் ! எப்படியிருக்கிறது அவருடைய அணுகு முறை ?''

''அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம்.ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை-மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன !''

'' நீங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க , திமுக அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் சபதம் போட்டிருக்கிறார்களாமே ?''

'' இதில் என்ன வியப்பு இருக்கிறது ! நாங்கள் திமுக-வோடு கூட்டணி வைத்திருந்தபோதும் அதைத்தானே செய்தார்கள். அதையும் தாண்டித் தானே எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் ! பணமும், பலமும் அவர்களிடம் இருக்கிறது ! அதை வைத்து எதையும் செய்வார்கள், எப்படியும் செய்தி பரப்புவார்கள் ! ஆனால், மக்கள் நம்ப மாட்டார்கள் !''

''புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பழைய எம்.பி.களுக்கே திரும்பவும் ஸீட் கொடுத்திருக்கிறீர்களே ?''

எங்கள் எம்.பி.க்கள் எல்லோருமே பிரதமராலும், சோனியா காந்தியாலும், சபாநாயகராலும் பாராட்டப் பெற்றவர்கள். தொகுதி மக்களாலும் பாராட்டைப் பெற்றவர்கள். அதெல்லாம் நாடாளுமன்றக் குறிப்பிலேயே இடம் பெற்றிருக்கிறது. நான் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுத்து, லண்டனில் இருக்கும் '' எகனாமிக் ஸ்கூல்'' மற்றும் ஹார்வர்ட் பல்கலைகழகத்துக்குப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தேன். அங்கே அவர்கள் பயிற்சியை முடித்துவிட்டு, அடுத்த கட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் 2011 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் ஸ்டார் வேட்பாளர்கள் !''

'' உங்கள் அன்புத் தம்பி திருமாவளவன், சிதம்பரத்தில் உங்கள் கட்சியை எதிர்த்து களம் காண்கிறாரே? ''

''வட மாவட்டங்களில் அண்மைக் காலமாக எந்த மோதலும், கலவரமும் இல்லாத ஒரு சூழ்நிலையை நானும் அவரும் சேர்ந்து ஏற்படுத்தினோம். இணைந்திருந்த எங்கள் கைகளை, கலைஞர் சூழ்ச்சி செய்து பிரித்து விட்டார். நான் தம்பியை எங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைத்தேன். அவரும் வந்து பேசினார். நான்கு முறை தனியாகப் பேசினோம். எந்த உடன்பாடும் வரவில்லை. பிறகு ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக என்னை திருமாவும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் சந்தித்தார்கள். நான் அவர்களிடம், ''எங்களைக் கூட்டணியில் இடம்பெறச் செய்ய, திமுக தரப்பிலிருந்து ஒரு மாவட்டச் செயலாளர்கூட என்னை அழைக்கவில்லை ! நீங்கள் நட்பின் அடிப்படையில் அழைக்கிறீர்கள் ! நட்பு வேறு., அரசியல் வேறு...'' என்று சொல்லி விட்டேன். அதன்பிறகு வேலூரில் நான், வைகோ,நெடுமாறன், மகேந்திரன் அனைவரும் திருமாவளவனிடம் பேசினோம். ''சரி., உங்கள் கூட்டணியில் இருக்கிறேன்...'' என்று திருமாவளவன் சொன்னார்.

அப்படிச் சொன்னவர், சிறுத்தைகளின் செயற்குழுவைக் கூட்டி முடித்த பிறகு என்னிடம் பேசினார். அப்போது, ''நம்முடைய இயக்கத்தில் பலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சியிருக்கிறது திமுக அரசு. அதனால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் திமுக-வில் இருக்கக்கூடாது என்று என் தோழர்கள் சொன்னார்கள். இருந்தாலும், நான்தான் ஒன்றரை மணிநேரம் பேசி அவர்களை திமுக கூட்டணியில் இருக்க சம்மதிக்க வைத்தேன் !'' என்று சொன்னார். எதனால் இந்த மாற்றம் என்று புரியவில்லை ! தம்பிக்கு என்ன நெருக்கடி என்றும் தெரியவில்லை ! ஆனால், நட்புக்காக நான் கூட்டணி தர்மத்தை விட்டுக்கொடுக்க முடியாது ! சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டியிட்டால், நாங்கள் அவரை ஜெயிக்க விடமாட்டோ

-ஜூனியர் விகடன் ( 08- 04- 2009)