திருக்குறள்

வலைப்பதிவு காப்பகம்

21 ஏப்., 2009

ஈழம் நேற்றும் இன்றும் எனும் மக்கள் தொலைகாட்சி தொடரில் தலைப்பு(title song) பாடல் –எழுதியவர் திரு.பச்சியப்பன்


என் இனிய சொந்தங்களே ,வாழ்வது ஒருமுறை ,பாமக பாமரன் இத்துடன்தனது இயக்க பணிகளை மீளாத்துயரோடு நிறுத்திவிடுகிறேன் (பாமக களம் காணாமல் ,ஈழம் நோவதைக்கண்டு )

ஈழம் நேற்றும் இன்றும் எனும் மக்கள் தொலைகாட்சி தொடரில் தலைப்பு(title song) பாடல் –எழுதியவர் திரு.பச்சியப்பன்

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

வெடி விழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காய்ந்த குளம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி படிந்த சிறு முற்றம்

இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை
தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய………………சம்மதமோ…………..

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

விளக்கேற்றிய மாடமெல்லாம்
வீழ்ந்து போனதோ…………..

ஊஞ்சலாடிய கம்பு இல்லை
நீந்தி பழகிய ஆறு இல்லை

என் தோப்பினுள் அலைந்த
பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற
தாய்பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட
விடியல் வருமோ
அர்த்த சாமத்தில்
வாழ்வு முடியுமோ


நன்றி திரு .மது

http://gkmadhu.blogspot.com/2009/02/title-song.html

குழலி பக்கங்கள்: நக்கிப்பிழைப்பவை நாய்கள்தான் போராளிகள் அல்ல!

குழலி பக்கங்கள்: நக்கிப்பிழைப்பவை நாய்கள்தான் போராளிகள் அல்ல!

தி.மு.க., கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி : ராமதாஸ் சொல்கிறார்


சேலம் : ""கருணாநிதி அமைத்த கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி,'' என சேலத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.


சேலத்தில் நேற்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 1967ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி ஆரம்பித்தது. காங்.,குக்கு எதிராக தி.மு.., தலைமையில் அமைத்த கூட்டணி அது. முதல் கூட்டணியே கொள்கை அடிப்படையில் அமைந்தது அல்ல. இதை பின்பற்றி தான், அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கொள்கை முரண்பாடு கொண்ட கட்சிகளும் தொகுதி உடன்பாட்டின் அடிப்படையில் ஒரே கூட்டணியில் இடம் பெற்றன.இப்படி கொள்கையில் முரண்பாடு கொண்ட கட்சிகள் தொகுதி உடன்பாட்டின் கீழ் ஓர் அணியில் இணைந்து போட்டியிடுவது தவறில்லை என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பலமுறை கூறி வந்துள்ளார். அண்ணாதுரையின் கருத்தைக் கூட கருணாநிதி மறந்து விட்டு, ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளதையும் மறந்து விட்டு, இன்று தேர்தல் பயம் காரணமாக .தி.மு.., கூட்டணி முரண்பாடான கூட்டணி என முத்திரை குத்தப் பார்க்கிறார்.
சேது சமுத்திர திட்டத்தில் அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு வேறு, பா.ம.க., - ம.தி.மு.க.,வின் நிலைப்பாடு வேறு. விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் குறித்து அ.தி.மு.க., நிலைப்பாடு வேறு, பா.ம.க., - ம.தி.மு.க., நிலைப்பாடு வேறு. அதனால், அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். நாள்தோறும் தூங்காமல் எழுதுகிறார், பேசுகிறார்.தன்னைப் பற்றி மட்டும் மறந்து விடுகிறார். தன் கண்ணில் பெரிய உத்திரம் இருப்பதை மறந்து விட்டு, மற்றவர் கண்ணில் துரும்பு இருப்பதாகக் கூறி வருகிறார். கொள்கை மாறுபட்ட கட்சியுடன் தி.மு.க., அணி சேர்ந்தால் அதற்கு ஒரு விளக்கம் சொல்கிறார். ஆனால், அதே ரீதியில் மற்றவர்கள் சேர்ந்தால் குறை கூறுகிறார். இது தான் கருணாநிதியின் பாணி.


தி.மு.க.,வும், காங்.,கும் ஒரே அணியில் இருப்பது 100க்கு 100 உடன்பாடு இல்லை. தி.மு.க.,வின் லட்சியத்தையும், கொள்கையையும் காங்கிரஸ் அப்படியே ஏற்றுக் கொள்கிறதா? காங்கிரசின் கொள்கை, லட்சியத்தை தி.மு.க., ஏற்றுக் கொள்கிறதா? தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியகருத்துக்கு இன்று (நேற்று) மறுப்பு தெரிவித்துள்ளார் கருணாநிதி. எனவே, முரண்பாடான, சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்ல வேண்டுமானால் தி.மு.., கூட்டணியைத் தான் சொல்ல வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

20 ஏப்., 2009

பாமக இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி..

ஏப்ரல் 05,2009,09:33 IST


' பாமக இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி...''- இதுதான் டாக்டர் ராமதாஸின் தேர்தல் கால கோஷம்

ஆனால், இந்தத் தேர்தலில்... மதிமுகவும், மார்க்சிஸ்ட்டும் தொகுதிப் பங்கீட்டில் அதிமுகவுடன் ''டூ'' விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், டாக்டரின் வாக்கு பலிக்குமா? தைலாபுரத்தில் இருந்த அவரிடமே சில கேள்விகளை முன் வைத்தோம்..

' அதிமுக கூட்டணியில் மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்று செய்திகள் வருகிறதே ?''

'' கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும், மார்க்சிஸ்ட்டுக்கும் ஒரேயொரு தொகுதிப் பங்கீடு,பெரும் சிக்கலில் இருந்தது. அந்த ஒரு தொகுதியால் அந்த இரண்டு இயக்கங்களின் கூட்டணியே முறிந்து விட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால், அந்த இயக்கங்களின் மேலிடத் தலைவர்கள் <உட்கார்ந்து பேசிச் சரி செய்தார்கள். அதுபோலவே எங்கள் கூட்டணியில் இருக்கும் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலை, எங்கள் கூட்டணித் தலைவர் சரி செய்வார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், நாற்பதும் எங்கள் கையில்தான் !''

' அதிமுக கூட்டணிக்குள் புதிதாகப் போன வேகத்திலேயே தேவையான தொகுதிகளைப் பெற்று, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டீர்கள் ! உங்கள் வருகைதான் மதிமுவை அந்தரத்தில் விட்டுவிட்டதாகப் பேசப்படுகிறதே ?''

'' தேர்தல் காலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு ஒரே சுற்றுப் பேச்சு வார்த்தையில் முடிந்து விடாது. தொடர்ந்து பேசித்தான் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். நாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தந்து விட்டது என்று சொல்ல முடியாது. சிலவற்றை விட்டுக்கொடுத்துதான் தொகுதிகளைப் பெற்றிருக்கிறோம். எங்கள் கட்சியை அதிமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுடன் மோதவிட, உளவுத்துறை தனது திருப்பணியை ஆரம்பித்திருக்கிறது. அதை எங்கள் கட்சித் தோழர்கள் நம்ப மாட்டார்கள். பாமகவுக்கும், அதிமுகவுக்கும் ஏற்பட்டிருப்பது இயற்கையான கூட்டணி !

நாங்கள் கூட்டணிக்குள் வருவதற்கு முன்பே மதிமுகவுடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். அந்தத்தோழமைதான் எங்களை ஓரணியில் சேர்த்தது. வைகோ மனம் புண்படும்படியாக எதுவும் நடக்காது. எங்கள் கூட்டணிக்குள் பெரும் புயல் வீசுவதாக எண்ணி, கலைஞர் இரண்டு மூன்று நாட்களுக்கு அற்ப சந்தோஷம் அடைந்துகொள்ளலாம். பாவம், இந்தத்தேர்தலில் அவர் அணிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது. குறைந்த பட்சம் இந்த அற்ப சந்தோஷமாவது மிஞ்சட்டுமே !''

'' தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் நீங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு மீண்டும் போகப் போவதாகவும், அதனால் காங்கிரஸை விமர்சிக்கும் பேச்சுக்கள் உங்கள் கூட்டணி மேடைகளில் இருக்காது என்றும் வரும் செய்திகள் பற்றி ?''

'' இந்தத் தேர்தலில் ஈழப் பிரச்னை, பிரதான பங்கு வகிக்கும். குறிப்பாக, ஈழத் தமிழர்களுக்காகக் கலைஞர் செய்த துரோகம் எங்கள் மேடைகளில் ஓங்கி ஒலிக்கும். ஈழப்பிரச்னை பற்றி எங்கள் கட்சித் தலைவர்கள் பேசிய கூட்டங்களில், கட்சி பேதமின்றி இளைஞர்கள் பெரும் திரளாகத் திரண்டார்கள் !

தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க நானும் வைகோவும் சென்றபோது பாமக., மதிமுக தொண்டர்கள் எங்களை வரவேற்று பிரம்மாண்டமான நுழைவு வாயில்களை வைத்திருந்தார்கள். திமுகவைப் பற்றி பேசுவதற்கே எங்கள் மேடைகளில் நேரம் போதாது. 77-ம் வருடம் நாடெங்கும் நெருக்கடி நிலை பிரதானமான பிரச்சாரமாக அமைந்தது. தேர்தல்முடிந்து, நாற்பது எம்.பி.க்களை கையில் வைத்திருக்கப்போகும் எங்கள் கூட்டணி ஆதரிக்கும் கட்சியில்தான் மத்தியில் ஆட்சியமைக்க முடியும் ! அந்த வகையில், எங்கள் கூட்டணியின் தலைவர் என்ன சொல்கிறாரோ, அதன்படிதான் நாங்கள் செயல்படுவோம்.''

'' எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறீர்கள் ! எப்படியிருக்கிறது அவருடைய அணுகு முறை ?''

''அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம்.ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை-மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன !''

'' நீங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க , திமுக அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் சபதம் போட்டிருக்கிறார்களாமே ?''

'' இதில் என்ன வியப்பு இருக்கிறது ! நாங்கள் திமுக-வோடு கூட்டணி வைத்திருந்தபோதும் அதைத்தானே செய்தார்கள். அதையும் தாண்டித் தானே எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் ! பணமும், பலமும் அவர்களிடம் இருக்கிறது ! அதை வைத்து எதையும் செய்வார்கள், எப்படியும் செய்தி பரப்புவார்கள் ! ஆனால், மக்கள் நம்ப மாட்டார்கள் !''

''புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பழைய எம்.பி.களுக்கே திரும்பவும் ஸீட் கொடுத்திருக்கிறீர்களே ?''

எங்கள் எம்.பி.க்கள் எல்லோருமே பிரதமராலும், சோனியா காந்தியாலும், சபாநாயகராலும் பாராட்டப் பெற்றவர்கள். தொகுதி மக்களாலும் பாராட்டைப் பெற்றவர்கள். அதெல்லாம் நாடாளுமன்றக் குறிப்பிலேயே இடம் பெற்றிருக்கிறது. நான் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுத்து, லண்டனில் இருக்கும் '' எகனாமிக் ஸ்கூல்'' மற்றும் ஹார்வர்ட் பல்கலைகழகத்துக்குப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தேன். அங்கே அவர்கள் பயிற்சியை முடித்துவிட்டு, அடுத்த கட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் 2011 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் ஸ்டார் வேட்பாளர்கள் !''

'' உங்கள் அன்புத் தம்பி திருமாவளவன், சிதம்பரத்தில் உங்கள் கட்சியை எதிர்த்து களம் காண்கிறாரே? ''

''வட மாவட்டங்களில் அண்மைக் காலமாக எந்த மோதலும், கலவரமும் இல்லாத ஒரு சூழ்நிலையை நானும் அவரும் சேர்ந்து ஏற்படுத்தினோம். இணைந்திருந்த எங்கள் கைகளை, கலைஞர் சூழ்ச்சி செய்து பிரித்து விட்டார். நான் தம்பியை எங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைத்தேன். அவரும் வந்து பேசினார். நான்கு முறை தனியாகப் பேசினோம். எந்த உடன்பாடும் வரவில்லை. பிறகு ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக என்னை திருமாவும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் சந்தித்தார்கள். நான் அவர்களிடம், ''எங்களைக் கூட்டணியில் இடம்பெறச் செய்ய, திமுக தரப்பிலிருந்து ஒரு மாவட்டச் செயலாளர்கூட என்னை அழைக்கவில்லை ! நீங்கள் நட்பின் அடிப்படையில் அழைக்கிறீர்கள் ! நட்பு வேறு., அரசியல் வேறு...'' என்று சொல்லி விட்டேன். அதன்பிறகு வேலூரில் நான், வைகோ,நெடுமாறன், மகேந்திரன் அனைவரும் திருமாவளவனிடம் பேசினோம். ''சரி., உங்கள் கூட்டணியில் இருக்கிறேன்...'' என்று திருமாவளவன் சொன்னார்.

அப்படிச் சொன்னவர், சிறுத்தைகளின் செயற்குழுவைக் கூட்டி முடித்த பிறகு என்னிடம் பேசினார். அப்போது, ''நம்முடைய இயக்கத்தில் பலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சியிருக்கிறது திமுக அரசு. அதனால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் திமுக-வில் இருக்கக்கூடாது என்று என் தோழர்கள் சொன்னார்கள். இருந்தாலும், நான்தான் ஒன்றரை மணிநேரம் பேசி அவர்களை திமுக கூட்டணியில் இருக்க சம்மதிக்க வைத்தேன் !'' என்று சொன்னார். எதனால் இந்த மாற்றம் என்று புரியவில்லை ! தம்பிக்கு என்ன நெருக்கடி என்றும் தெரியவில்லை ! ஆனால், நட்புக்காக நான் கூட்டணி தர்மத்தை விட்டுக்கொடுக்க முடியாது ! சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டியிட்டால், நாங்கள் அவரை ஜெயிக்க விடமாட்டோ

-ஜூனியர் விகடன் ( 08- 04- 2009)

19 ஏப்., 2009

அழகிரியும் ஜே.கே.ரித்தீஷும் எனக்கு வராத லெக்பீஸும்


உடன்பிறப்பே..

நமது சாம்ராட் கலைஞர் ஒரு வழியாக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டார். என்னே விந்தை இம்முறையும் மத்திய சென்னையில் எதிர்பார்த்தது போலவே தயாநிதியும் மதுரையில் மு.க.அழகிரியும் போட்டியிடுகின்றனர். அதிலும் நமது மதுரை மாமன்னர் மு.க.அழகிரி அவர்கள் அடுத்த திருமலைநாயக்கராய் ஆக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது மகனும் மகளும் இன்னும் அவர்தம் தந்தையைப்போல வெற்றிகள் பல பெற்று மன்னருக்கேற்ற இளவரசனாய் இளவரசியாய் மதுரையை ஆட்சி புரிவதை கண்ட பின்னேதான் நம் உடன்பிறப்பின் உயிர் பிரியவேண்டும். உயிர்பிரியும் வரை வாயில் விரலும் நெஞ்சில் கழகத்தின் கொள்கையுமாய் நீ சாவதை காணவேண்டும் என் உடன்பிறப்பே.

ஒரு பர்சனல் வேண்டுதலும் சேர்த்துக்கொள்வோம் உடன்பிறப்பே!... ஆண்டவா அடுத்து வரும் ஜென்மத்திலாவது கலைஞர் குடும்பத்தில் பிறந்து திமுகவில் கூட உறுப்பினர் ஆகாமல் எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக அருள்புரியவேண்டும். திமுகவில் மிகச்சிறந்த தொண்டர்கள் இருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தகுதி கலைஞர் குடும்பத்தில் பிறந்த கண்மணிகளுக்கே உண்டென கலைஞரின் நானுற்று இருபத்தைந்தாவது ஒன்று விட்ட இரண்டாவது மருமகனின் நான்கவது மகனின் மூன்றாவது மகளின் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட தெரியுமே.

தற்சமயம் வெளியாகியிருக்கும் வேட்பாளர் பட்டியலும் அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்காட்டிவிட்டது. இது தவிர சிரிபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு என்கிற மிக நேர்மையான,பாசாங்கில்லாத நல்லவர் போட்டியிடுகிறாராம். நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். நெப்போலியன் கூட எங்கோ போட்டியிடுகிறாராம். என்னது நெப்போலியன் யார்னே தெரியாதா... மக்களே சில வருஷங்களுக்கு முன்னால ... இப்ப ஞாபகம் வந்திருக்குமே.. அவர்தான். நிறைய பணமிருப்பவர்களும் போட்டியிட தகுதியுடையவர்கள் என்பது திமுகவில் புதிய விதிமுறை போல.




இதற்கெல்லாம் மேல் மணிமகுடமாய் பதிவுலக பேமஸ்,வடபழனி ஆட்டோ பேமஸ், நாயகன் பட பேமஸ் அரைசென்னை அதிபர் அண்ணன் ஜே.கே.ஆர் என்கிற ஒரு சிங்கமும் திமுகவின் வேட்பாளார் பட்டியலில் இடம் பெற்று தனது அரசியல் வாழ்க்கையை துவங்குகிறது. அந்த சிங்கம் மட்டும் எம்.பி ஆகட்டும் மவனுங்களா பதிவுலகில் அண்ணனை அசிங்கப்படுத்தி அவர் புகழ்ப்பரப்பும் அனைவருக்கும் தனது நாயகன் மற்றும் கானல்நீர் படங்களின் ஒரிஜினல் விசிடியும் , ஒரு லிட்டர் விஷமும் தரப்படும். உங்களது உயிர் விசிடி கவரைப்பார்த்தே பிரிந்து போனால் கம்பேனி அதற்கு பொறுப்பாகாது.

ராமதாசு எனும் துரோகியை நினைத்து வருந்த வேண்டாம் உடன்பிறப்பே! திமுகவின் இந்த வேட்பாளர் பட்டியலே டெரராக இருக்கிறதே. எல்லாருமே வெற்றிபெறும் அல்லது வெற்றியை வலிந்து பெறும் வேட்பாளராக தெரிகிறார்கள். உதாரணம் அழகிரி மற்றும் ரித்திஷ்

இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவருமே திடீரென எங்கிருந்தோ முளைத்தவர்கள். ஒரு நாளும் திமுகவின் போராட்டங்களில் ( அப்படி ஏதேனும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடத்தியிருந்தால்) கலந்து கொள்ளாதவர்கள். கழகத்தின் வளர்ச்சிக்காய் தன் உயிர்தவிர வேறு எவர் உயிர் வேண்டுமானாலும் எடுக்கத் தயங்காத கண்மணிகளடா அவர்கள்... நிறைய பணத்துடன் ஒரு ஏரியாவையே கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். நிறைய அடியாட்களுடன் சுற்றுபவர்கள். டாடா சுமோ ரவுடிகள் போல் அல்லாமல் ஸ்கார்ப்பியோவில் சுற்றிவரும் பாரியும் ஓரியுமடா அவர்கள்!தேர்தலையும் தன் பிறந்தநாளையும் ஒரே மாதிரி கொண்டாடுபவர்கள். ஊருக்கே பிரியாணி போட்டு நிறைய லெக்பீசும் போடுகிறவர்கள் . என்ன ஒரே வித்தியாசம் என்றால் ரித்திஷ் முக.வின் மகன் அல்ல. அவரது பிரியாணியில் கிடப்பது லெக்பீஸும் அல்ல.

ரித்திஷ் என் தொகுதியில் போட்டியிடவில்லையே என வருந்தவைக்கும் அளவுக்கு தொகுதி மக்களுக்கு '' நிறைய '' செய்கின்ற நம் கழகத்தின் அருமையான கலங்கரை விளக்கமடா நம் தம்பி ரித்தீசு . தனக்கு ஓட்டுப்போடும் முதல் நபருக்கு வாட்ச்சும் இரண்டாவது ஆளுக்கு மோதிரமும் தந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை அத்தனை தயாள மனம் படைத்த வள்ளலடா நம் தளபதி ரித்தீசு.

அது தவிர மூன்று வேளை பிரியாணி, மாதம் 2000 ரூபாய், குவாட்டர் இத்தனையும் ரித்திஷாலும் அழகிரியாலுமே தர இயலும். பாரடா என் கண்மணியே இன்னும் சில மாதங்களில் எப்படி இருந்த தமிழ்நாடு எப்படி ஆகப்போகிறதென! இத்தகைய தலைவர்களை தமிழ்நாடு பெற்றதே நமக்கு பெருமை இல்லையா? தன் பிறந்தநாளுக்கு தனக்குத்தானே போஸ்டர் அடித்துக்கொள்ளும் கலாச்சாரத்தை துவங்கி வைத்த பெருமை இவர்களுக்கே சாரும். அதிலும் இருவரும் எம்பியாக மட்டும் ஆகிவிட்டால்.. தென்னகத்து ஓபாமாவே,இந்தியாவின் சேகுவாராவே, வாழும் வள்ளுவரே, நீ சிரித்தால் தீபாவளி , நீ ஆய் போனால் பொங்கல் என இந்த இருவரது போஸ்டர்கள் இனி அதிகமாக இருக்குமே!

அதிமுக எனும் அந்நியசக்தியைக்கண்டு அஞ்சாதே என் உடன்பிறப்பே! அவர்தம் ஆளுமை போயஸ்த்தோட்டத்தின் முட்டுச்சந்தில் புதைந்து போய் பல வருடமாகிவிட்டதடா என் கண்மணியே!

அழகிரி போட்டியிடும் தொகுதியில் போட்டியிட நேரடி போட்டியாளரான போயஸ்த்தோட்டத்து போக்கிரிகளே அஞ்சி நடுங்குகின்றனர்.. நம்மோடு போரிட்டு வெல்ல எவருண்டு இம்மாமண்ணில்.. திருமங்கலம் போரில் அதிமுகவின் டவுசரைக்கழட்டி புறமுதுகிட்டு ஓட விட்டது அத்தனை எளிதில் மறந்துவிட்டதா என் கண்மணியே.. ராமநாதபுரம் சிங்கமும் மதுரை புலியும் எம்.பியாகி தமிழனுக்காவும் தமிழின மக்களுக்காகவும் போராடி இந்தியாவிலேயே தமிழ்நாட்டை பீகாருக்கு இணையான மாநிலமாக மாற்ற தாலி காத்த காளியம்மன் அருள்பாலிப்பாளடா என் கண்மணியே!
அனைத்து வேட்பாளரும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவிப்போம் . வாயில் விரலை வைத்துக்கொண்டு இம்முறையும் திமுக நாளைநமதே நாற்பதும் நமதே என போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வென்று தனது மீதி இரண்டாண்டு ஆட்சியை காத்துக்கொள்ளட்டும்.

கலைஞர் இன்னும் பல்லாண்டுகள் ஆட்சி செய்து தமிழ் வளர்க்கட்டும். இளைஞரணி தலைவராகவே ஸ்டாலின் இன்னும் நூறாண்டுகள் பதவி வகிக்கட்டும்.

மாமன்னர் கலைஞர் வாழ்க - அவர்தம் குடும்பம் வாழ்க - உன் குடும்பம் உனக்கெதற்கு - திமுக என்னும் அருமையான கழகமிருக்க.. வா என் கண்மணியே தேர்தல் பணியாற்ற வா.. கொடியவரை வீழ்த்துவோம் வா..


***************************

கருப்புக்கொடி ஏந்திய காலம் போச்சே!


யுவகிருஷ்ணா: கருப்புக்கொடி ஏந்திய காலம் போச்சே!

18 ஏப்., 2009

பணத்தால் தி.மு.க.,வெற்றி பெற முடியாது':மருத்துவர் அய்யா



சென்னை:""பணத்தை கன்டெய்னரில் கொண்டு வந்து இறக்கினாலும், விமானத்தில் பறந்து கொண்டே 1,000 ரூபாய் நோட்டுக்களை வாரி வீசினாலும், தி.மு.க., கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது,'' என்று பா.ம.க., நிறுவனர் மருத்துவர் அய்யா பேசினார்.ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க., வேட்பாளர் செயல்வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த பல்லாவரத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மருத்துவர் அய்யா பேசியதாவது:அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி ஒரு இயற்கையான கூட்டணி. நாளுக்குநாள் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. மக்கள் சக்தி ஜெயலலிதா பின் உள்ளது. உழைப்பிற்குப் பெயர் பெற்ற கம்யூனிஸ்டுகள் நம்முடன் இருக்கின்றனர். இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் தோற்கப் போகிறது. "பணம் தான் தேர்தல் என்றால், டாடா, பிர்லா, அம்பானி போன்றோர் தான் பிரதமராக வர முடியும்' என்று ஜெயலலிதா கூறினார்.

டாட்டா ஒரு தொகுதிக்கு 50 கோடி வீதம் 543 தொகுதிகளுக்கும் செலவு செய்தால், அவர் வெற்றி பெற்றுவிடுவாரா; மக்கள் அவரைப் பிரதமராக ஆக்குவாரா? இது முடியாத காரியம்.நமது கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கைகள், நோக்கங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லியும், தி.மு.க., அரசின் அவலங்களை எடுத்துச் கூறியும் ஓட்டு கேட்க வேண்டும்.பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், மக்கள் என்னைத் தேடி வர வேண்டாம்; நான் மக்களைத் தேடி வருவேன். எறும்பை விட சுறுசுறுப்பாக உழைத்து, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்.இவ்வாறு மருத்துவர் அய்யா ராமதாசு பேசினார்.

16 ஏப்., 2009

இலங்கைக்கு இறுதி எச்சரிக்கை: ராமதாஸ் கோரிக்கை


சென்னை : "இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி எதையும் துறக்கவேண்டாம்; அவர்களைக் காப்போம் என்று தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை:இலங்கையில் எது நடந்துவிடக்கூடாது என்று அஞ்சினாமோ அந்த கொடுமை சிங்கள இனவெறி போர்ப்படையினரால் அரங்கேறி வருகிறது. போர் முனையில் நேருக்கு நேர் மோதும் போராளிகளை வெல்ல முடியாமல் திணறுகின்ற சிங்கள படையினர், பாதுகாப்பு வளையங்களில் தஞ்சம் புகுந்துள்ள அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள அக்னி குண்டுகளை வீசி, இதுவரை நடந்திராத அளவில் இன ஒழிப்பை நடத்துகின்றனர். உலகில் எங்கெங்கோ நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுக்கும் இந்திய அரசு, இலங்கையில் நாள்தோறும் தமிழினத்தைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக இதுவரை ஒரு முறை கூட உரக்க எச்சரிக்கை விடவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் தமிழக மக்களுக்கு இருக்கிறது. இலங்கை தமிழர்களை அரவணைத்து பாதுகாக்க வேண்டிய கடமைப்பொறுப்பும், பன்னாட்டு சட்டத்தின்கீழ் நேரடியாக தலையிடுவதற்கான உரிமையும், சட்டத்தகுதியும் உள்ள இந்தியா, இந்த கடைசி நிமிடத்திலாவது தலையிட்டு போரை நிறுத்தி, அங்கே நடக்கும் தமிழின பேரழிவை தடுத்து நிறுத்தவேண்டும். வெறும் 48 மணி நேரம் போர்நிறுத்தம் என்ற ஏமாற்று வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டபோது, அது எங்களால் தான் வந்தது மார்தட்டியவர்களுக்கு, இப்போது இலங்கை தமிழர்களை காப்பாற்றினோம் என்ற பெயரெடுக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மத்திய அமைச்சர் சிதம்பரமும், மத்திய அரசை செயல்பட வைத்திருக்கிறோம் என்று மார்தட்டும் தி.மு.க., தலைவரும், மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, போரை நிறுத்த இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடவேண்டும். இலங்கை தமிழர்களை காப்பதில் மத்திய அரசு இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த கடைசி சந்தர்ப்பத்தையாவது மத்திய அரசு நழுவ விடக்கூடாது என்று இருவரும் எடுத்துச் சொல்லவேண்டும். இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம் என்று பேசியவர் முதல்வர் கருணாநிதி. அவர் எதையும் துறக்கவேண்டாம். இலங்கை தமிழர்களை காப்போம் என்று உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று மத்திய அரசை நோக்கி, இந்த ஆபத்தான நேரத்தில் உரக்க குரல் கொடுத்தால் போதும். தேர்தல் நேரம் என்றதும் இலங்கை தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் விடும் சிதம்பரத்தையும் உங்களோடு துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள். போரை நிறுத்துங்கள் அல்லது முன்பு போல விமானப் படையை அனுப்பி தமிழர்களைக் காப்போம் என்று எச்சரிக்கை விடச் செய்யுங்கள். இதை சாதித்தால் வரலாற்றில் பொறிக்கப்படும். இல்லையென்றால் தமிழினம் உங்களை சபிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ஏப்., 2009

“வாழும் பக்தவச்சலங்கள்”

muthukumar01

உலகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கிப் போட்டிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். இப்பூவுலகை விட்டுப் புறப்படுவதற்கு முன் தான் பயணப்படுவதற்கான காரணங்களை மிகத் தெளிவாக அச்சிட்டு……. நிதானமாக ஒவ்வொருவர் கையிலும் அளித்துவிட்டு……. மூடியைத் திறந்து ஊற்றினால் பெட்ரோல் பரவலாகத் தன் உடலில் பரவாது என்று அதன் அடிப்பகுதியை அறுத்து தன்னை முழுதாகக் குளிப்பாட்டிக் கொண்டு பற்ற வைத்திருக்கிறான் தோழன் முத்துக்குமார்.

அந்தத் தோழனின் மரண சாசனத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரியும் இதயமுள்ள எவரையும் கண்ணீர் விட்டு அழ வைக்கும். உள்ளூர் அரசியலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசி ஆராய்வதிலிருந்து……. சர்வதேச அரசியலின் ஆணிவேரையும் அடையாளம் காட்டியிருக்கிறது அவனது மரண சாசனம். இது இந்த நூற்றாண்டின் மக்களுக்கான இலக்கியமாக என்றென்றும் வீற்றிருக்கும்.

“வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை…….” எனத் தொடங்கும் அந்தத் தோழனின் மடல் தமிழக - இந்திய ஓட்டுப் பொறுக்கிகளின் யோக்யதை……. தமிழக மாணவர்களது போராட்ட உணர்வு……. காவல்துறையில் எஞ்சியிருக்கும் ஓரிரு நேர்மையாளர்களும் மக்களுக்காகப் அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியம்……. காலத்தின் கட்டாயமாகிப் போன ஈழத்தின் விடியல்……. என எண்ணற்ற திசைகளில் பயணிக்கிறது அக்காவியம். அத்தோடு நில்லாமல் முத்துக்குமார் தான் நேசிக்கும் சர்வதேச சமூகத்தை நோக்கி வீசியிருக்கும் வினா……. அறிவு நாணயமுள்ள எவரையும் சிந்திக்க வைக்கும் வினா.

அதை அத்தோழனது வரிகளிலேயே சொல்வதானால்……. ” வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன் படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?” முத்துக்குமாரின் வரிகளில் உள்ள சர்வதேச அரசியல் பார்வையையும்……. சர்வதேச சமூகத்தின் சகிக்கமுடியாத மெளனம் குறித்த கவலையையும்……. வாசிக்க வாசிக்கவே……. இத்துணை அற்புதமான தோழனை இழந்திருக்கிறோமே எனக் கண்ணீர் விட்டு அழுதேன். ஒருமுறை அல்ல. பலமுறை.

தான் வெறுமனே தமிழ் வெறியனல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஓருயிர் என்பதை உணர்த்தும் விதமாய்…….” படுகொலை செய்யப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர் லசந்தாவின் சாவுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…….

தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதிகளாக வந்த சிங்களத் தம்பதியினர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்…….” என்கிற வரிகளை வாசிக்கும்போது விண்ணுக்கும் மேலாய் உயர்ந்து நிற்கிறான் அம்மானுடன்.

“என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்” என்கிற தம்பியின் வேண்டுகோளை ஏற்று……. போலீசை மட்டுமல்ல……. ஓட்டுப் பொறுக்கிகளையும் ஓட ஓட விரட்டியிருக்கிறார்கள் இளைஞர்கள்.

காங்கிரசின் கிளைக் கழகமாகிப் போன தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வுக்கு உதை…….

போயஸ் தோட்டத்தில் “போர்த்தந்திரம்” வகுக்கும் வை.கோவிடம் “ஜெ.கிட்டே இருந்து வெளீல வந்துட்டு ஈழத்தைப் பத்திப் பேசு” என்கிற எச்சரிக்கை…….

என ஓட்டுத் தலைவர்கள் எவரும் தப்பவில்லை இந்த இளைஞர்களிடம். காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் இந்தித் திணிப்பிற்கெதிரான மாணவர்களது மொழி உணர்வுகளை தங்களுக்காக அறுவடை செய்து கொண்ட தி.மு.க.வினருக்குத் தெரியாதா……. எதை எப்படிச் சமாளிப்பதென்று? அதுவும் அப்படியே செய்தது…….. கல்லூரிகள் அனைத்தையும் இழுத்து மூடி, மாணவர்களை வெளியேற்றியது. ஆனால் அதையும் உடைத்தெறிந்து இந்தக் கணம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது மாணவர்களது யுத்தம்.

காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பகதவச்சலம் மாணவர்களை ஒடுக்க எதை எதையெல்லாம் செய்தாரோ……. அவைகளை அச்சு பிசகாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் “வாழும் பக்தவச்சலமான” முத்தமிழறிஞர்.

இந்த லட்சணத்தில் இருக்கின்ற அமைப்புகள் போதாதென்று “இலங்கை தமிழர் நல உரிமை பேரவை” என்று இன்னொரு புது அமைப்பு வேறு. பெரியாருக்கு ஆப்படிக்கும்போது “தலைவர்” பதவியைக் காலியாக விட்ட மாதிரி…….

இந்த அமைப்புக்கும் இப்போது “தலைவர்” கிடையாதாம்…….

அதன் துணைக் குழுவுக்கு அமைப்பாளராக துரைமுருகனாம்…….

செயலாளர்களில் ஒருவராக இரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழாயான கி.வீரமணியாம்…….

இப்படி நகர்கிறது இவர்களது நகைச்சுவை நாடகம். இதற்கு பதிலாக…….

தலைவராக “வழக்கம்போல்” கலைஞரும்…….

பொதுச் செயலாளராக ராஜபக்சேவும்…….

பொருளாளராக சோனியாவும்…….

செயலராக ஜெயலலிதாவையும்…….

துணைச் செயலாளராக சுப்ரமண்யன்சாமியையும்…….

சேர்த்துப் போட்டிருக்கலாம்.

கிழிஞ்சது கிருஷ்ணகிரி.

கொஞ்ச காலம் முன்பு வட மாநிலத் தொலைக்காட்சி ஒன்று “கருணாநிதி” என்பதற்குப் பதிலாக “கருணா” என்று அழைத்ததைக் கண்டு கடும்கோபமும்……. எரிச்சலும் கொண்டேன்.

ஆனால்…….

நடந்து வரும் நாடகங்களயும்…….

நயவஞ்சகங்களையும்……. பார்க்கும்போது…….

ஈழத்துக் “கருணா”விடம் இருந்து மட்டுமில்லை…….

இந்தியக் “கருணா”க்களிடம் இருந்தும்

ஈழப்பிரச்சனையை மீட்டால்தான்

தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட

தம்பி முத்துக்குமாரின் கனவு நனவாகும்

என்பது மட்டும் உறுதி.

நன்றி :திரு .பாமரன்

March 10, 2009

14 ஏப்., 2009

பாமகவிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்குமாறு விடுதலைப்புலிகள் மறைமுக வேண்டுகோள்






ஈழத்தமிழர்களின்மீது மீண்டும் அ.தி.மு.க கரிசனை எடுப்பது மகிழ்ச்சி திருகின்றது பா.நடேசன்

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க அணியினர் ஈழத்தமிழர்கள் மேல் அதிக கரிசனை காட்டுவதும், அவர்களின் விடியலுக்கு ஆதரவு தெரிவிப்பதும் எமக்கும், எமது மக்களுக்கும் நம்பிக்கையினையும், மகிழ்ச்சியையும் தருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

"ஹெட் லைன்ஸ் ருடே" என்ற ஆங்கில ஊடகத்திற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார். அங்கு தொடர்ந்து மேலும் கருத்து தெரிவித்துள்ள பா.நடேசன், ஈழத்திழர்களின் பால் இன உணர்வாலும், பாசத்தாலும் தமிழக மக்கள் ஒன்றியே நிற்கின்றார்கள்.

அந்த வகையில் ஆரம்ப காலங்களில் அ.தி.மு.க வின் நிறுவுனரும், முன்னாள் முதலமைச்சருமாக இருந்த அமரர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், ஈழத்தமிழர்களுக்கான விடிவுக்காக சகல வழிகளிலும், வெளியப்படையாக முழு உதவிகளையும் வழங்கியிருந்தார்.

அதேபோல அண்மையில் தற்போதைய அந்தக்கட்சியின் தலைவி செல்வி. ஜெயலலிதா ஜெயராமன் அவர்கள், ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரமே தீர்வாக அமையும் என தெரிவித்திருந்தார்.

அத்தோடு தற்போது வன்னியில் இடம்பெறும் பேரவலங்கள், மனிதப்பேரழிவுகள் கண்டு, தமது அனுதாபங்களையும், இந்திய மற்றும் சிறி லங்கா அரசுகளுக்கு கண்டனங்களையும் தெரிவித்திருந்தார்.

இவற்றின் மூலம் செல்வி.ஜெயலலிதா ஜெயராமன் அவர்கள் தற்போது ஈழத்தமிழர் விடயத்தில் ஒரு தெளிவான நிலையில் உள்ளார் என்பது புரிகின்றது.

அத்தோடு தற்போது ஈழத்தமிழர்களின் தமிழக பாதுகாவல் தூண்களான ம.தி.முக. செயலாளர் வைகோ அவர்களும், பா.ம.க நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அந்த அணியிலேயே இருப்பது, அ.தி.மு.க அணியினரின் ஈழத்தமிழர் விவகாரத்தை பெரிய அளவில் முன்னெடுக்கும். இந்த நிலையில் ஈழத்தமிழர்களின் பால் பாராமுகம் காட்டிவரும் இந்திய காங்கிரஸ் அரசின் செயல் தவறு என எதிர்வரும் தேர்தல்கள் இந்திய அரசுக்கு உணர்த்தும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அ.தி.முக. அணியினரின் ஈழத்தமிழர் மீதான கரிசனையும், தமிழக மக்களின் ஈழத்தமிழர்கள், அவர்களது போராட்டத்திற்கான பேராதரவும், எமக்கும் எம் மக்களுக்கும் மகிழ்ச்சியைத்தருவதாக நடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.


உலகத்தமிழரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில் கருணாநிதி மௌனம்: ஜெயலலிதா

ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் உலகத்தமிழரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கலைஞர் கருணாநிதி மட்டும் எதுவுமே நடைபெறாததைப் போன்று மௌனம் சாதித்துக் கொண்டிருக்கின்றார்.

உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்த வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"ஆட்சி அதிகாரம் தன் பக்கம் இருக்க வேண்டும், தன் குடும்பம் வளமாக வாழ வேண்டும் என்ற தன்னலத்தின் காரணமாக, இலங்கைக்கு இந்திய அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் நவீன சாதனங்கள் அனுப்பியதையும், சிறீலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளித்ததையும் வேடிக்கை பார்த்தவர் முதல்வர் கருணாநிதி.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தட்டிக் கேட்டு, அதற்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பாரேயானால் சிறீலங்கா அரசுக்கான மத்திய அரசின் உதவி அன்றே நிறுத்தப்பட்டிருக்கும். ஈழத்தமிழர்கள் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

ஆனால் கருணாநிதி அதனைச் செய்யவில்லை. கருணாநிதியின் சுயநலம் காரணமாக இன்று இலங்கையில் தமிழர்கள் இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் தொடரும் மோதல்கள் பற்றிய தகவல்கள் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, நோர்வே உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு, தமிழர்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்காக உலகத்தில் உள்ள தமிழர்களின் குரல்கள் எல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில், இலங்கையில் எதுவுமே நடக்காதது போல தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி மௌனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தற்போது இலங்கைத் தமிழர்களைக் காக்க உள்ள ஒரே வழி உடனடி போர் நிறுத்தம் தான். தமிழர்கள் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
















கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுங்கள் : தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே ,
வணக்கம்


நமது கட்சி அ.தி.மு. க.,வுடன் கூட்டணி சேரவேண்டும் என்று நீங்கள் விரும்பிய வண்ணமே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதை அறிவீர். கூட்டணியில் ம.தி.மு.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., இன்னும் பிற கட்சிகள் இணைந்திருப்பது நமக்கு மேலும் வலு சேர்க்கிறது.இந்தத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் பா.ம.க., வேட்பாளர்களும், மற்ற 33 தொகுதிளில் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்த 33 தொகுதிகளிலும் பா.ம.க., வேட்பாளர்களே போட்டியிடுவதாகக் கருதி, நீங்கள் தொய் வில்லாமலும், சோர்வில் லாமலும் கடினமாக உழைத்து நமது கூட்டணிக் கட்சிகளின் வேட்பா ளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.ஒவ்வொரு ஓட்டுச்சாவடி வாரியாகவும், ஒன்றிய, நகர வாரியாகவும் நமது கூட்டணி வேட்பாளர்களுக்குக் கிடைத்த ஓட்டு எண்ணிக் கையை தனித்தனியாகப் பார்க்க உள்ளேன். எங்கும் ஓட்டுக்கள் குறையக்கூடாது. தேர்தல் பிரசாரப் பணியில் நீங்கள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி பணி தடையில்லாமல் நம் கட்சியின் பெருமை மிக்க மரபுகளைக் காக்கும் வகையில் நீங்கள் தோழமைக் கட்சியினருக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்கி, மற்றவர்களைவிடச் சிறப்பாகப் பாடுபட்டு வெற்றிக் கனியைப் பறித்துத்தர வேண்டும்.

கூட்டணிக் கட்சி வேட்பாளர்களிடமிருந்து வாகனம், தொகை, வேறு பிற தேவைகள் என அவர்களைத் தொந்தரவு செய்யாமல் உங்களிடமுள்ள குறைந்த வசதி வாய்ப்புகளைக் கொண்டேனும் நிறைவான வகையில் நீங்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும்.தங்கள் கட்சியினரைவிட பா.ம.க.,வினரே சிறப்பாகத் தேர்தல் பணிகளை நிறைவேற்றி, வெற்றியைத் தேடித் தந்தனர் என்று பாராட்டும் படியாக உழைப்பர் என எதிர்பார்க்கிறேன்.


இப்படிக்கு

உங்கள் உண்மையுள்ள

மருதத்துவர் .ச.ராமதாசு

பாமாக நிறுவனர்

திண்டிவனம்.

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் ப.சிதம்பரத்திற்கு(காங்கிரஸ்க்கு ) ராமதாஸ் 9 கேள்விகள்



இலங்கை தமிழர் பிரச்சனையில் பாமகவை விமர்சித்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பம். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கைத் தமிழர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டிய பெற்றோர்கள் என்ற முறையிலும், தமிழர்களின் தொடக்கத் தாயகம் என்பதாலும், இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் நேரடியாக தலையிடுவதற்கான உரிமையும், கடமைப் பொறுப்பும், சட்டத் தகுதியும் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை பிரதமரிடமும்,

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடமும், வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியிடமும் பா... தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.

நேரில் சந்தித்தும்,கடிதங்கள்வாயிலாகவும்இதனைவற்புறுத்தியிருப்பதுடன்,மக்களவையிலும், பா... உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட பா.ம.க. மீது சிதம்பரம் இப்போது தேர்தலுக்காக வீண் பழி சுமத்த முற்பட்டிருக்கிறார்.

1. இலங்கைத் தமிழர் சிக்கல், கடந்த 4 ஆண்டுகள் 11 மாதங்களில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதப் பொருள்களில் ஒன்றாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறதா? எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால் எந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது? விவாதப் பொருளாக என்ன விவாதிக்கப்பட்டது? அந்த விவாதத்தில் சிதம்பரத்தின் பங்களிப்பு என்ன?



2. இந்தச் சிக்கல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கே ஒருபோதும் வரவில்லை என்றால் ஏன் வரவில்லை?
அமைச்சரவைக் கூட்டத்தில் இதை விவாதப் பொருளாகக் கொண்டு வருவதற்கு பொறுப்பான அமைச்சகம் எது? சம்பந்தப்பட்ட அமைச்சகம் ஏன் அதைச் செய்யத் தவறியது?



3.இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் நேரடியாகத்
தலையிடுவதற்கான உரிமையும், கடமைப் பொறுப்பும், சட்டத் தகுதியும் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த உரிமை எப்போதேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்திலாவது விவாதிக்கப்பட்டிருக்கிறதா?



4. இல்லை என்றால், தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் மூத்த மந்திரியும், நிதித்துறை, உள்துறை போன்ற முதன்மையான
பதவிகளை ஏற்றவரும், அரசின் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் அமைச்சரவைக் குழுக்களில் இடம் பெற்றவருமான சிதம்பரம் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?


5. இலங்கை மீது சீனாவும், பாகிஸ்தானும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் அதன் மீது `செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆற்றல்' இந்தியாவுக்கு இல்லை என்று சிதம்பரம் சொல்லவில்லையா? இதன் மூலம் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முழுத் தோல்வி என்று அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லையா?



6. இந்தக் கொள்கையை வகுத்து, நிர்வகிப்பது யார்? - மத்திய அமைச்சரவையா? வெளியுறவு அமைச்சகமா? அல்லது
குறுகிய கண்ணோட்டம் உடைய, பிறர் மீது நம்பிக்கையற்ற அதிகாரிகளா? மிகவும் மூத்த மந்திரி என்ற முறையில் சிதம்பரம் இதுபற்றி எப்போதாவது கவனம் செலுத்தியது உண்டா?



7. இலங்கைத் தமிழர் சிக்கல், வெகு தொலைவில் உள்ள இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில்
எல்லாம் வாதிட்டு, விவாதிக்கப்படும்போது, அண்டை நாடான இந்தியாவின் பாராளுமன்றத்தில் இதை அரசாங்கமோ, காங்கிரஸ் கட்சியோ ஏன் முன்வைத்து விவாதிக்கவில்லை? மக்களவையில் வினா நேரத்துக்குப் பிறகு பா.ம.க. உறுப்பினர்கள் மூலமாக இந்தச் சிக்கல் குறுகிய நேரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் கூட, சிதம்பரம் எங்கே போயிருந்தார்?



8. வெகு தொலைவில் இருக்கும் அமெரிக்காவில் பாராளுமன்றக் குழு இலங்கைத் தமிழர்களின் மனிதப்பேரழிவு சிக்கல்
குறித்து விசாரிக்கும் போது, இந்தச் சிக்கல் ஏன் ஒரு போதும் இந்திய பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவுக்கு கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்படவில்லை?



9. தொடர்ச்சியாகக் கோரிக்கைகள், மனுக்கள், சட்டப் பேரவைத் தீர்மானங்கள், அனைத்துக் கட்சித் தீர்மானங்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழுக்கள், முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தூதுக்குழு, இப்படியெல்லாம் முறையிட்டும்கூட, இலங்கைத் தமிழர் சிக்கலில் அக்கறை இல்லாமலும், ஈடுபாடு இல்லாமலும் இந்திய அரசு அமைதியாக இருந்து வருகிறது.


உண்மையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசும் அதன் படைகளும் நடத்திவரும்
இனப்படுகொலைக்கும், இனவெறிப்போருக்கும் இந்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.


இலங்கைப் படைகளுக்குப் போர்ப்பயிற்சி அளித்தல், போர்க் கருவிகள் வழங்கிப் பராமரித்தல், ரேடார் இயக்குதல், விமானம் மூலம் வேவு பார்த்துக் கண்காணித்தல், உளவுத் தகவல்களை வழங்குதல், கடற்படை மூலம் முற்றுகை முதலியவை அதில் அடங்கும். இந்திய அரசு இவை எதையும் மறுக்கவில்லை. இதுபற்றி சிதம்பரம் என்ன சொல்கிறார்?


இப்படியெல்லாம் சிதம்பரத்தை(காங்கிரஸ்) நோக்கி எண்ணற்ற கேள்விகளை எழுப்ப முடியும். இவற்றுக்கெல்லாம் சிதம்பரம் என்ன
பதிலளிக்க முடியும்’’ என்று கேள்விகள் எழுப்பியுள்ளார்.

8 ஏப்., 2009

பாமகவின் முன் உள்ள சவால்-சிதம்பரம்,அரக்கோணம் ,ஸ்ரீபெரும்புதூர்


பாமகவின் முன் உள்ள சவால்

பலர் நினப்பது போல் இல்லாமல் சவால் நிறைந்த தொகுதிகளே பா.ம.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள். ஸ்ரீபெரும்புதூர் மறுசீரமைப்பிற்குப் பின் உருமாற்றம் பெற்று சென்னையின் புறநகர் தொகுதியாக மாற்றம் கண்டிருக்கிறது.சிதம்பரமும் பாதிக்குப் பாதி என்ற அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. தர்மபுரி, அரக்கோணம் அதிக சிரமம் இராது. ஒரு Quick look


ஸ்ரீபெரும்புதூர்: ஆ.கி.மூர்த்தி
http://india.gov.in/govt/loksabhampdetail.php?mpcode=257
முன்பு இது கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெருநகரின் அருகமைந்த 'கொல்லைப்புற' (Backyard) நாடாளுமன்றத் தொகுதியாக விளங்கியது.
இன்று இது மதுரவாயல், அம்பத்தூர், .ஆலந்தூர்,.ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம். ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. இதில் மதுரவாயில்,அம்பத்தூர், பல்லாவரம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள். தாம்பரம் சட்டமன்றத் தொகுதியும் சில பகுதிகளை வேளச்சேரி தொகுதியிடம் இழந்திருக்கிறது. எனவே வெற்றி வாய்ப்பைக் கணிக்க பழைய கணக்குகள் உதவாது. ஆனால் சில நுண் ஆய்வுகள் (Micro analysis) மூலம் சில ஊகங்களை மேற்கொள்ளலாம்.

2006 சட்டமன்றத் தேர்தலின்போது வில்லிவாக்கம் தொகுதியில் அடங்கியிருந்த அம்பத்தூர், மதுரவாயில் பகுதிகளில் திமுக கணிசமான வாக்குகள் பெற்றது என திமுகவினர் சொல்கிறார்கள். புதிதாக உருவாகியுள்ள பல்லாவரம் ஆலந்தூர் தொகுதிக்குள் இருந்தது.ஆலந்தூரில் 2001ல் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்
ஆர்.எம்.வீரப்பனை வீழ்த்திய அதிமுக 2006ல் சுமார் 18 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது.(அதாவது இங்கு கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன) (மாற்றத்திற்குட்படாத) தாம்பரத்தில்.
2001, 2006 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திமுகவே வென்றது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 2001ல் அதிமுக அணியின் ஆதரவிலும், 2006ல் திமுக அணியின் ஆதரவிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வெற்றி பெற்றார் (அதாவது இங்கும் கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத்
தீர்மானிக்கின்றன)

சுருக்கமாகச் சொன்னால் இது திமுகவிற்கு சாதகமான தொகுதிதான். ஆனால் இதன் சில பகுதிகளில் கூட்டணி மாஜிக் வேலை செய்யும்.

ஆலந்தூர், தாம்பரம் ஆகியவை தென் சென்னைத் தொகுதியில் இருந்ததால், தென் சென்னை எம்.பி.யான டி.ஆர்.பாலு அந்தப் பகுதிகளில் தன்வசமிருந்த அமைச்சகத்தின் மூலம் நிறைய வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறார். ஆனால் வில்லிவாக்கம் வட சென்ன்னையில் இருந்ததால் அவர் அந்தப் பகுதிகளில் இதே அளவு கவனம் செலுத்தினார் எனச் சொல்ல முடியாது. என்றாலும் அவர் திமுக சார்பில் களமிறங்கினால் போட்டி கடினமாக இருக்கக் கூடும்.

இது நகர் சார்ந்த தொகுதியாக இருப்பதால், ஜாதி செல்வாக்கு பெருமளவில் வேலை செய்யாது. பணம் வேலை செய்யலாம். ஆனாலும் நடுத்தர வர்கத்தின், குறிப்பாக தொழிலாளர்களின் அரசியல் நிலைப்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை

சிதம்பரம்



சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், விருத்தாசலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் இன்று, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய இரண்டு தொகுதிகளும், கடலூர் லோக்சபா தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மங்களூர் தொகுதி சில மாற்றங்களுடன் திட்டக்குடி என்ற புதிய சட்டமன்றத் தொகுதியாக கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. எனவே சிதம்பரம் தொகுதியில் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள்தான் (சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி) இருக்கின்றன. அவற்றோடு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்பு இருந்து இப்போதும் நீடிக்கிற மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இப்போது (சிதம்பரம், புவனகிரி) அதிமுக வசம் இருக்கின்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய கட்சிகளின் துணையில்லாமல் போட்டியிட்டு வெற்றி கண்ட தொகுதிகள் இவை என்பதால் அதற்கு அங்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்போது பாமகவும் அதனுடன் இணைந்து கொள்வதால் அந்த அணியின் வலு அதிகரித்திருக்கிறது. இன்னொரு பழைய தொகுதியான காட்டுமன்னார் கோயிலை விடுதலை சிறுத்தைகள் வென்றது. அன்று அது அதிமுக அணியில் இருந்தது. இன்று விடுதலைச் சிறுத்தைகள் இடம் மாறிவிட்டாலும், அந்த இழப்பை பாமக ஈடுகட்டக் கூடும் என்பதால் இப்போதும் இதை அதிமுக அணிக்குச் சாதகமான தொகுதியாகத்தான் கொள்ள வேண்டும்.

மீதமுள்ள குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகியவை புதிதாக உருவான தொகுதிகள்.

1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களிலும் பாமக தொடர்ந்து வெற்ற் பெற்று வந்திருக்கிறது. மூன்று முறையும் 3லட்சம் -3.5லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது (பதிவான வாக்குகளில் 45-47%) இங்கு இரண்டு முறை
திருமாவளவன் போட்டியிட்டு இரு முறையும் தோல்வி கண்டிருக்கிறார். 1999ல் சுமார் 1.25 லட்சம் வாக்குகளில் தோற்றார். 2004ல் 87 ஆயிரம் வாக்குகளில் தோற்றார்.1999ல் அதிமுக ஆதரவோடு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றார் என்பது கவனிக்கத் தக்கது.

இந்த முறையும் போட்டி திருமாவிற்கும் பாமகவிற்குமிடையேதான் இருக்கும். தோற்றத்தில் மாற்றம் கண்டுள்ள தொகுதி எப்படித் தீர்ப்பளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்


அரக்கோணம்

அரக்கோணமும் மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால் கணிக்கக்கூடிய அளவிற்கான மாற்றங்கள்தான். திருத்தணி காட்பாடி ஆகிய இரண்டு தொகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.இதில் திருத்தணி அதிமுக வசம் உள்ளது.

காட்பாடி துரைமுருகனின் சட்டமன்றத் தொகுதி.. கெளரவப் பிரசினையாக எடுத்துக் கொண்டு பாமகவிற்கு எதிரான போட்டியைத் தீவீரப்படுத்தலாம்

ரயில்வே துணை அமைச்சர் வேலு கடந்த முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். ஒருவேளை திமுக இந்த முறை ஜகத்ரட்சகனைக் களமிறக்கக் கூடும்

6 ஏப்., 2009

பா.ம.க.,வை வீழ்த்த வால்லாதிக்க நரிகள்




நீண்ட யோசனைக்குப் பின், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து ஏழு இடங்களை பா.ம.க., பெற்றது. பா.ம.க., எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் அதை தோல்வி அடையச் செய்ய வடமாநில வர்த்தக சக்திகள் சில தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் செல்லும் இடங்களில் எல்லாம் "மது எதிர்ப்பு' பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அரசுக்கு நெருக்கடியும், பிரபல மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொழில் ரீதியிலான பாதிப்பும் உருவாகிறது. மத்திய அமைச்சர் அன்புமணி, புகை பிடிக்கும் தடை சட்டத்தை கொண்டு வந்தார். இதனால் வடமாநிலங்களைச் சேர்ந்த பிரபல சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தந்தையும், மகனும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால், கடும் அதிருப்திக்கு ஆளான புகை மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்கள், நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தன. லோக்சபா தேர்தலை சந்திக்க அந்த சக்திகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.உளவுத் துறைக்கும் இதுகுறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், அக்கட்சி வேட்பாளருக்கு எதிராக வடமாநில சக்திகளின் பணம் பல கோடிகள் புரளும் என கூறப்படுகிறது.
நன்றி :தினமலர் 0௬/0௪/௨00௯



பாமரனின் முக்கிய வேண்டுகோள் :தேர்தல் திருவிழாவில் மது ,புகையை குடிக்காதிர் ,குடியை கேடுக்காதிர் ,வால்லாதிக்க நரிகள் வந்து நிதி கொடுத்தால் வாங்கிக்கொண்டு வாக்குபெட்டியில் நீதியை மாங்கனிக்கு செலுத்துங்கள்

5 ஏப்., 2009

கருணாநிதி போட்ட சோப்பு ,ஐயா அடிச்ச ஆப்பு


ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009

ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறுவதில் உண்மையில்லை எனவும் அதை யாரும் ஏற்கமாட்டார்கள் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:(ஐயா அடிச்ச ஆப்பு)

1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. நெருக்கடி நிலையை எதிர்த்து தி.மு.க. செயற்கு ழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கோபமடைந்தார் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தின்போது, இந்தியாவின் கட்டுப்பாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாக அறிவிக்கும் அளவுக்கு தி.மு.க. ஆட்சி உள்ளது என இந்திரா காந்தி குற்றஞ்சாட்டினார். அதற்கு மறுநாள் 1977, ஜனவரி 31-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது

1972-ல் தி.மு.க.விலிருந்து பிரிந்து அ.தி.மு.க.வைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தி.மு.க. அமைச்சரவை மீது 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை அளித்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆட்சி கலைக்கப்பட்டது.

அப்போது இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை. ஆனால் அதற்குப் பிறகு நெருக்கடி நிலையை கொண்டு வந்த அதே காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தது. அக்கூட்டணி தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது கருணாநிதி அளித்த நிர்பந்தம் காரணமாக 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. அரசை, மத்திய அரசு கலைத்தது

1983-ம் ஆண்டில்தான் இலங்கை இனப் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. அப்போது கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தார். ஈழத் தமி ழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய எம்.ஜி.ஆருக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியால்தான் கருணாநிதி இராஜிநாமா செய்தார்

1991-ம் ஆண்டு இரண்டாம் முறையாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. வி.பி. சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. வி.பி. சிங் பதவி இழந்ததைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமரானார்

வி.பி. சிங்கோடு நெருக்கமாக இருந்தார் என்பதற்காக, ராஜீவ்காந்தி ஆசியோடு தி.மு.க. அரசு அப்போது கலைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் விடுதலைப் புலிகளை அடக்க கருணாநிதி தவறிவிட்டார் என்பதும் ஒன்றாகும்

ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமல்ல. எனவே ஆட்சி கலைப்புக்கு மத்திய அரசு கூறியது உண்மையான காரணமல்ல.

1980-ம் ஆண்டில் இந்திரா காந்தி உதவியோடு எம்.ஜி.ஆர். ஆட்சியை கருணாநிதி கலைத்தார். அதே காரணத்தால்தான் 1991-ல் ராஜீவ்காந்தியின் உதவியோடு தி.மு.க. ஆட்சியும் கலைக்கப்பட்டது எனவே இரண்டு முறை தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் உள்ளூர் அரசியல், தில்லியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள் மற்றும் அப்போது ஏற்பட்ட கூட்டணி மாற்றங்கள் உள்ளிட்டவையே காரணம்

ஆகவே ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று இனி மேலும் கருணாநிதி கூறினால், அதை யாரும் ஏற்கமாட்டார்கள் என ராமதாஸ் கூறியுள்ளார்.


தி . மு .காவின் இனத்துரோகம்! (சாகும்போது கூடவா பெரியண்ணான் )