திருக்குறள்

30 மார்., 2009

திருவண்ணாமலை தொகுதி பா.ம.க வெற்றி வேட்பாளர் காடுவெட்டி குரு


திருவண்ணாமலை தொகுதி பா.ம.க வேட்பாளர் காடுவெட்டி குரு அரசியல் -வாழ்கை குறிப்பு.,

பெயர்: ஜெ.குரு (எ) குருநாதன்.

வயது:: 45.


சொந்த ஊர்: காடுவெட்டி, உடையார்பாளையம் தாலுகா, அரியலூர் மாவட்டம்.


கல்வித்தகுதி: பி.யு.சி.,


இனம் : வன்னியர்


குடும்பம்: மனைவி சொர்ணலதா, மகள் விருத்தாம்பிகை, மகன் கனல் அரசன்.


பெற்றோர்: முன்னாள் ராணுவவீரர் ஜெயராமன், கல்யாணி.


தொழில்: விவசாயம்


அரசியல் அனுபவம்: ஆரம்பம் முதல் வன்னியர் சமுதாய மேம்பாட்டில் ஈடுபாடு கொண்டு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதல் படி செயல்பட்டு வருகிறார். 1996, 2006ம் ஆண்டுகளில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001ம் ஆண்டு ஆண்டிமடம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


கட்சி மற்றும் சங்கப் பதவிகள்: பா.ம.க., பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலர், வன்னியர் சங்கத்தின் உடையார்பாளையம் தாலுகா செயலராக பணியாற்றினார். தற்போது வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் வன்னியர் சமூக கல்வி அறக்கட்டளை செயலராக உள்ளார்.


சிறப்பு தகுதி: வன்னியர் சங்க மேம்பாடு மற்றும் தனி அரியலூர் மாவட்டம் கோரி நடந்த போராட்டத்தில் முன்னின்று செயல்பட்டவர். வன்னியர் சமூக இடஒதுக்கீடுக்காக நடந்த மாநில அளவிலான போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார்.


பலம்: மாநிலம் முழுவதும் உள்ள வன்னியர் சமூக மக்களின் நம்பிக்கையாளராக உள்ளார்.


பலவீனம்: வெளிப்படையாக பேசி கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புகளை சம்பாதிப்பது.

கருத்துகள் இல்லை: