
வன்னி வதை முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூரில் ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ’’இலங்கை அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் நாங்கள் இறக்கப்போகிறோம் எங்களை விடுவியுங்கள் என்று அவர்களை பார்க்க சென்றவர்களிடம் கூறியிருக்கிறார்கள்.
இலங்கைக்கு பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் போயிருந்தால் அந்த குரல்களை பதிவு செய்து சொல்வார்கள்.
முன்பைவிட இப்போது ஈழத் தமிழர்கள் வெகுண்டு எழுந்துள்ளார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சவை பழிவாங்காமல் விடமாட்டோம் என்ற நிலையில் உள்ளனர். என்ன பழி என்றால் தமிழ் ஈழம் மலர்வது தான். இதை நோக்கி தாய் தமிழர்களுடைய பயணம் இருக்க வேண்டும்.
நிச்சயமாக தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் இல்லையா என்று கேட்கிறார்கள். அந்தவகையில்தான் தொடர் முழக்க போராட்டம் செய்தோம்.
இதேபோல் தொடர்ந்து நம்முடைய பயணம் இருக்கும். இதை பற்றி இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவோம்’’ என்றார் ராமதாஸ்.
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2009
(30)
-
►
April
(19)
- ஈழம் நேற்றும் இன்றும் எனும் மக்கள் தொலைகாட்சி தொடர...
- குழலி பக்கங்கள்: நக்கிப்பிழைப்பவை நாய்கள்தான் போரா...
- தி.மு.க., கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி : ராமத...
- பாமக இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி..
- அழகிரியும் ஜே.கே.ரித்தீஷும் எனக்கு வராத லெக்பீஸும்...
- கருப்புக்கொடி ஏந்திய காலம் போச்சே!
- பணத்தால் தி.மு.க.,வெற்றி பெற முடியாது':மருத்துவர் ...
- இலங்கைக்கு இறுதி எச்சரிக்கை: ராமதாஸ் கோரிக்கை
- “வாழும் பக்தவச்சலங்கள்”
- பாமகவிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்?
- அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்குமாறு விடுதலைப்புல...
- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
- ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் ப.சிதம்பரத்திற்கு(காங்க...
- தேர்தல் ஸ்பெஷல்: ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) ஸ்ரீபெரும...
- 'தீ'லீபன் - இவன் உண்மை தமிழன்: மருத்துவர் ராமதாஸ்
- பாமகவின் முன் உள்ள சவால்-சிதம்பரம்,அரக்கோணம் ,ஸ்ரீ...
- பா.ம.க.,வை வீழ்த்த வால்லாதிக்க நரிகள்
- கருணாநிதி போட்ட சோப்பு ,ஐயா அடிச்ச ஆப்பு
- தி . மு .காவின் இனத்துரோகம்! (சாகும்போது கூடவா பெர...
-
►
April
(19)
13 அக்., 2009
ராஜபக்சேவை பழிவாங்காமல் விடமாட்டார்கள்: ராமதாஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 மதிப்புரை:
கருத்துரையிடுக